"ஆணிவேர் அசைந்துவிட்டால் மரம் விழுந்துவிடும்; குடும்ப அஸ்திவாரம் பலமில்லாமல் போய்விட்டால் ஆட்டம் கண்டுவிடும்' என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நாக்குச் சுவைக்கு நன்னாரி வேர். தலைமுடி வளர வெட்டிவேர். ஆயுள் நீட்டிப்புக்கு நத்தைச்சூரி வேர். ஆண் மகனின் வீரியத்திற்கு கொடிக்குறிஞ்சான் வேர். பொருள் பலத்தை அடையவும் வியாபாரத்திற்காக மக்களை ஈர்க்கவும் ஸ்வேதார்க்க மூலி வேர்- வெள்ளெருக்கன் என்ற மிகச்சக்திவாய்ந்த வேர்! இந்த வேரைப் பயன்படுத்தி நலம்பெற சித்த ரகசியம் ஒன்று காகபுஜண்ட மகரிஷியாலும், குறுமுனிவர் அகத் தியராலும் சொல்லப்பட்டது.
இளந்தளிராய் வளர்ந்து வரும்போது அதன் பெயர் பயிர்.
வளர்ந்து நின்று நம் வலிகளைப் போக்கும்போது மூலிகை.
இறைசக்தியைப் பெற்று எழுந்து நின்று வரங்களைப் பெற்றுத்தருவதால் அதற்குப் பெயர் தாவரம்.
ஆலயங்களில் இறைவன் சந்நிதிக்குப்பின் நின்று ஆசிவழங்கி மக்கள் நலனை விருத்தி செய்வதால் விருட்சம் என்ற பெயர் பெற்றது.
பத்திரம் என்னும் அர்ச்சிக்கும் இலை, உணவுக்குக் காய்கள், தண்டுகள், ருசித்திட பலவகைக் கனிகள், மாலையாகத் தொடுத்திட மலர்கள் என இவையனைத்தும் நமக்குக் கிடைத்திட, நம் கண்களுக்குத் தெரியாமல் பூமிக்குள் புதையுண்டு அமைதியாய் இருக்கும் வேர்களே காரணம்.
வேர் என்பதற்கு ஆங்கிலத்தில் தர்ர்ற் என்பார்கள். பூமியில் ஊடுருவிச் சென்று நீரெடுத்து வளர்ந்து நமக்கு நலம் தருவது.
Rectifier- துன்பம் தவிர்ப்பது; Organiser- உருவாக்குவது; Occult power maker-மனசக்தியைத் தூண்டுவது; Trustful life presenter- நம்பிக்கையான வாழ்வளிப்பது என்று ஒரு வேரின் ஆராய்ச்சிக் களச்சொல் பலவுண்டு.
வேர் என்பது நமக்கு எல்லா வகையிலும் இறைவடிவமாகப் பயன்தரும். இந்த உலகில் எல்லாருக்கும் வியாபாரத்தில் தொய்வில்லாத பண வருவாய், மக்கள் வரத்து ஆகியவை நடந்திட ஸ்வேதார்க்க மூலி என்னும் விநாயகப் பெருமான் அருள்நிறைந்த வேரை விதிப்படி பூஜைசெய்து வீட்டிலும் வியாபாரம் செய்யும் இடங்களிலும் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அந்த வேரை ஒருமுறை மட்டுமே பூஜை செய்து, பிறகு சக்தியூட்டாமல் வணங்கி வருவதால், சில மாதங்கள் சென்றதும் அது தனது மகிமையை இழந்துவிடுவதோடு பயனும் தருவதில்லை.
வெள்ளெருக்கு விருட்சச் சிறப்பு
இந்திய நாட்டின் தென்னகப் பகுதியில் வெள்ளெருக்கன் செடிகள் காடுபோலப் பரவி இருந்ததால் அதற்கு "அர்க்க வனம்' என்ற பெயர் நிலைத்தது.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார்கோவில் தல புராணத்தில் இந்த வேரின் அபூர்வ செய்திகள் காணக்கிடைக் கின்றன.
ஒரு காலத்தில் காலவ முனிவர் இமயமலையில் தவம்செய்து வந்தார். அப்போது எதிர்காலம் பற்றிக்கூறும் சக்தி படைத்த அவரை பல முனிவர்களும் அணுகி பலன் கேட்டனர். அச்சமயம் இளந்துறவி ஒருவர் தனக்கும் எதிர்காலப் பலன் கூறக் கேட்க, ""உமக்கு எந்தவித எதிர்காலப் பலனும் இல்லை'' என்றார். உடனே இளந்துறவி, ""நான் யார் தெரியுமா? காலதேவன். முதலில் உமது எதிர்காலம் பற்றி அறிவாயாக'' என்று கூறி மறைந்து விட்டார்.
காலவரும் தன் ஞானதிருஷ்யால் பார்த்தார். தான் முற்பிறவியில் நண்டுகளின் கால்களை எடுத்து உண்டதால், இப்பிறவியில் தொழுநோயால் பீடிக்கப்படுவோம் என்பதை அறிந்தார். உடனே விந்திய மலையில் அக்னி வளர்த்து நவகிரகங்களை வேண்ட, அவர்கள் காட்சி தந்து தொழு நோய் அணுகாதபடி வரம் தந்தனர். இதைக்கண்ட பிரம்மன் கோபமாகி, ""சிவபெருமான் ஆணைப்படி காலதேவன் துணையோடுதான் வரம் தருதல் வேண்டும். விதியை மீறிய தால் நீங்கள் ஒன்பதுபேரும் காலவ முனிவரின் நோய் பீடிப்புக் காலம்வரை பூவுலகில் துன்புறுக!'' என்றார்.
இதனால் கலங்கிய நவநாயகர்கள் பிராயச்சித்தம் கேட்க, ""தென் தமிழகத்தில் காவிரிக்கரையிலுள்ள அர்க்கவனம் சென்று, திங்களன்று புனித நீராடி, அங்கு மங்களநாயகியுடன் அருள்தரும் பிரணவநாதரை வழிபட்டு, எருக்கன் இலையில் தயிரன்னம் உண்டு வருக'' என்றிட, அத்தலம் சென்றபோது அகத்திய முனிவரையும் சந்தித்து ஆசிபெற்றனர்.
ஆதி அகத்திய நாடியில்...
சித்தர் நூல், சிவ நூல், ஆதி நூல், அகத்திய நூல், அகத்தியர் வாக்கு என்று புகழப்படுகிற ஆதி அகத்திய நாடியின் செய்யுளில் ஸ்வேதார்க்க மூலிகை வேரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிக்கு இந்த விருட்சம் வந்ததே வித்தியாசமான தகவலாக உள்ளது.
பார்வதியும் பரமேஸ்வரனும் தனியாக நந்தவனத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது தேவிக்கு ஒரு ஆசை வந்தது. அபிஷேகப் பிரியனான பரமனை மனம் குளிரும்படி அபிஷேகம் செய்துபார்க்க விரும்பி அவரிடம் கேட்டாள். ""அப்படியே ஆகட்டும்'' என்று சொல்லி விஸ்வரூபம் எடுத்து நின்றார். இதைக்கண்ட தேவி அமர்ந்த கோலத்தில் அந்த விஸ்வரூபனை தியானித்து ஆத்மாவில் நிறுத்தி அபிஷேகம் செய்தாள். கடைசியாக வாசனை விபூதியை அபிஷேகம் செய்ய, அவர் உடலை அசைத்துச் சிலிர்க்க, அதிலிருந்து வெண்மையான புகை திரண்டு ஓர் உருவமாகி, இறைவனையும் தேவியையும் வணங்கி நின்றது. உடனே தன் சிரசிலிருந்து ஒரு வெள்ளெருக்கனைக் கொடுத்து, ""இதனைத் திருக்கயிலையின் வடபால் நட்டுவைத்துப் பூஜை செய்க'' என்று வாழ்த்தி அனுப்பினார். புகை வடிவில் வந்த காகபுஜண்டர் பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற நிவேதார்க்கத்தை பூஜை செய்து பெரும்பேறு பெற்றார்.
சுகவாழ்வு தரும் ஸ்வேதார்க்க பூஜை விதி
சதுர்த்தி திதி, பௌர்ணமி, அமாவாசை தினங்களில் காலை சூரிய உதயகாலத்தில், வடக்குப் பக்கமாகச் செல்கிற வெள் ளெருக்கன் வேருக்கு கன்னி நூல் என்னும் மஞ்சள் நூலைக் கட்டி, காகபுஜண்ட குரு துதியை மூன்றுமுறைகூறி விபூதியும் மஞ்சள் பொடியும் செடிமேல் தூவவேண்டும்.
சூட்சுமம் ஸ்ரீ காகதேவம் ஹிமகிரி
சிகரே நித்ய சிம்மாசனஸ்தம்
சுத்த ஸ்வேத சுபாங்க மங்கள
வரம் சர்வ ப்ரபஞ்சாதிபம்
காலா தீதப்ரதீபம் கனக கண
சதுர்பாஹும் ப்ரபும் சாஸ்வதம்
விஷ்ணு ப்ரம்ம சுரேந்த்ர சேவிதம்
ஆதித்யாதி நவக்ரஹேச வினுதம்
அத்வைதம் அத்யத்புதம்
ஸ்ரீ பஞ்சாட்சர சின்மயம் சிவமயம்
ஸ்ரீகாகதேவம் பஜே!
பிறகு வேரை எடுத்தல் வேண்டும். இந்தத் துதியில் ஒரு ரகசியம் சூட்சுமமாகச் சொல்லப் பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். இந்த தியானத்துதியால் காகபுஜண்டரை வணங்கி வந்தால் குரு துரோகம், நவகிரக தோஷங்கள் அகன்று, பஞ்சாட்சர ஜெபம் செய்த பலனும், சிவபெருமானின் அருட்பார்வையால் பிரபுத்துவம் என்ற பட்டம் பெறும் அளவுக்கு செல்வப்பேறும் உண்டாகிவிடும்.
தொடர்ந்து விநாயக ரூபத்தை வெள்ளெருக் கால் வலம்புரியாகச் செய்து வைத்து, வெள் ளெருக்கு மலரால் ஆவாஹன பூஜையைக் கீழுள்ள சக்தி வாய்ந்த மந்திரங்களால் செய்தல் வேண்டும்.
1. ஓம் மகாரூபம் மகா விருட்சம்
மகேச மகுடோத்பவம்
ஸ்வயம் பிரகாசம் ஸ்வயம் பூர்ணம்
ஸ்வேதார்க்கம் பூஜாயாம் யஹம்.
2. சதவரோக ஹரம் சாந்தம்
சர்வதோஷ நிவாரணம்
சதாலக்ஷ்மீகரம் புண்யம்
ஸ்வேதார்க்க மூலிம் ஆவாஹயாமி.
3. சனி ராகுத்ஸ கேது த்ஸ
சர்வ பீடா நிவாரணம்
சுமுக கௌரீ சிவாகாரம்
ஸ்வேத மூலிம் பூஜயாமி.
4. மகா காக புசுண்டாதி
சித்த மண்டல பூஜிதம்
நாகாபரண மகாமூர்த்திம்
ஸ்வேத மூலிம் அர்ச்சனம்.
5. நித்யம் நித்யேன சௌபாக்யம்
நித்ய மங்கள அற்புதம்
க்ஷிப்ரானுக்ரஹ சாந்நித்யம்
ஸ்வேத மூலிம் உபசாரகம்.
6. ஸ்தூலம் சூக்ஷ்மம் ஸ்வர்ண லக்ஷ்மி
ப்ரத்யட்ச விருட்ச மட்சயம்
ஸ்வேதம் சம்பூர்ண மந்த்ராங்கம்
ஸ்வேத மூலிம் பூஜயாம்யகம்.
ஆவாஹன பூஜாம் சமர்ப்பயாமி.
காகபுஜண்ட மகரிஷி சொல்லித் துதித்த ஸ்ரீஸ்வேதார்க்க மகா கணபதி தியானமும் காயத்ரியும் மூன்றுமுறை படித்து ஆரத்திசெய்து வழிபாட்டை நிறைவுசெய்ய வேண்டும்.
கைகூப்பியபடி கூறுக.
"த்யாயேத் ஸ்ரீகணநாயகம் சிவகதம்
த்ரைலோக்ய சம்மோகனம்
விஸ்வாமித்ர வசிஷ்ட பத்ம கனக
துர்வாஸ சம்பூஜிதம்
ப்ரத்யக் க்ஷாட்சர மந்த்ர யந்த்ர
வரதம் ஸ்வேதார்க்க மூலோத்பவம்
க்ஷிப்ரானுக்ரஹ விக்ரஹம்
கஜமுகம் சர்வார்த்த சித்தி ப்ரதம்
வெள்ளெருக்கு விநாயகர் காயத்ரி மந்திரம்
ஓம் ஸ்வேத நாதாய வித்மஹே
கௌரீ புத்ராய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
(108 முறை ஜெபிக்க வேண்டிய காயத்ரி மந்திரம்)
வேண்டுவதை அருளும் வெள்ளெருக்கு நமது வாழ்நாளில் தடைகள் அகன்று, கடன் தீர்ந்து பொருள் நிலை உயர விநாயகரை அறுகு, வன்னி, வெள்ளெருக்கு ஆகிய மூவகை மூலிகைகளைப் பயன்படுத்துவது அவசியம் என்று அகத்தியர் தனது சித்த மூலி ரகசியத்தில் குறிப்பிட்டுள்ளார். வெள்ளெருக்கு வேரால் இரண்டு அங்குலம் மட்டும் அளவுள்ள விநாயகரைச் செய்து, புனுகு, ஜவ்வாது, அத்தர் இவற்றில் ஒரு வாசனைப் பொருளை மட்டுமே தடவி பூஜைசெய்து வரவேண்டும்.
காகபுஜண்டர் இந்த ரகசிய முறையை சிவபெருமானிடமிருந்தே பெற்று பலன் கண்டு உணர்த்தினார். எனவே, காகபுஜண்டரை குருவாக எண்ணி, அவரை செப்பு எந்திர வடிவில் தியானத்திலுள்ள ரூபவர்ணனையால் வரைந்து, ஐங்காயம் பூசி குருபூஜைசெய்து, வெள்ளெருக்கு விநாயகப் பெருமானது தியா னத்தின்வழியே கணேச எந்திர வடிவம்செய்து, வீட்டுப் பூஜையறையில் வைத்து முறையோடு வணங்கிவர, ஆறுபட்ச காலங்களுக்குள்- சுக்ல சதுர்த்திகள் சென்றபின் நல்ல முன்னேற்றப் பலன்களைக் காணலாம்.
ஸ்வேதம்- வெள்ளை நிறம், அர்க்கம்- எருக்கு. இந்த அரியவகை மூலிகை வசியசக்தி மிக்கது என சித்தர் பாடல்களால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதன் வேர்- அதனால் செய்யப்படும் சிறு சிலை, யந்திர வடிவங்களை வீடு, கடை, வியாபாரத் தலங்களில் வைத்து வணங்கி சுகபோகங் களைப் பெறலாம்.
அகத்தியர் அருளிய வெள்ளெருக்கு
மூலிகைகளின் அபூர்வ சக்திகள் அருளும் தன்மைகளை விளக்குவது சிவநூல் என்னும் சித்தர் பாடல் தொகுப்பு. இதில் ஆயிரக்கணக்கான பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ஒருசமயத்தில் வசிஷ்ட மகரிஷி ஸ்வேதார்க்க மூலிகை பற்றி அகத்தியரிடம் கேட்டபோது, அவரது முதல் சீடராகிய ஸ்ரீதிரணதூமாக்னி கூறுவதைப் பாருங்கள். அதில் ஒரு அபூர்வப் பாடல்-
"அந்தர வியோம சித்தர்
அனுதினம் பூசித் தேத்தும்
மந்திர ஸ்வேத மூலி
வளர்மதி முழுமை நாளில்
தந்த தக்கின மார்க்கத்தின்
சகல தேவதைகள் தாமும்
பந்த முற்றவர்க்கு மிக்க
பாக்கிய நலம் செய்வாரே!'
அகத்திய முனிவரின் குரு வந்தனத்
தோடு சேர்த்து பத்து முக்கியப் பாடல்கள் இதன் அபூர்வ சக்தியை எடுத்துக்கூற, மூலிகையின் ஆகர்ஷண ஈர்ப்பு சக்தியைக் கூட்டும் துதியாகவும் வருகிறது. அதில் முக்கியமான பாடல் இதுவே. நினைத்த காரியம் நிறைவேறவும், நவகிரகங்களால் நேரடி தோஷங்கள், பார்வைகள் உள்ளவரும், துர்தேவதா ஏவல்கள், சூன்ய வைப்பு களால் கஷ்டப்படுவோரும், துர்தசாபுக்திகள் நடப்பால் துன்புறுவோரும் ஸ்வேதார்க்க வேர் பூஜையால் சுபயோகங்களைப் பெறலாம்.
செல்: 91765 39026